கின்னஸ் உருவானது எப்படி?.

கின்னஸ் உருவானது எப்படி தெரியுமா?
உலகளவில் அதிகம் விற்பனையாகியுள்ள புத்தகம், கின்னஸ் புத்தகம். இதுவே ஒரு கின்னஸ் சாதனை தான்.                               

உண்மையில் கின்னஸ் என்பது அயர்லாந்தை சேர்ந்த ஒரு பீர் கம்பெனி. 1759 முதல் இயங்கிவரும் இந்த பாரம்பரிய நிறுவனத்தில் 1946ல் சர் ஹக் பீவர் என்பவர் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். 1951-ல் ஒரு நாள், பீவர் வேட்டைக்கு சென்றார். காட்டில் ‘கோல்டன் ப்ளோவர்’ என்ற பறவையை சுட்டார். அது உப்புக்கொத்தியா, கவுதாரியா என்ற சந்தேகம், அப்போது அவருக்கு வந்தது. அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இது தொடர்பாகப் பெரிய விவாதமே நடந்தது. துப்பாக்கி குண்டு வேகத்தையும் மிஞ்சி பறந்து தப்பியது.

அப்படியென்றால் ஐரோப்பாவிலேயே மிகவேகமாக செயலாற்றும் பறவை கோல்டன் ப்ளோவர் தானா என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ஆனால் இதை உறுதி செய்யவோ மறுக்கவோ எந்த குறிப்பேடும் இல்லாதது அவருக்கு வருத்தத்தை தந்தது. தானே அப்படி ஒரு புத்தகத்தை தயாரித்தால் என்ன என்று அவர் நினைத்தார்.அவர் வேலை பார்த்த கின்னஸ் நிறுவனமே அவரின் முயற்சிக்கு உதவியது.

அதன் அடிப்படையில் நாரிஸ், ராஸ் மெக்விர்டர் ஆகிய இருவரையும் ஆசிரியர்களாகப் பீவர் நியமித்தார். அதிகம் வெளியே தெரியாத தகவல்களைக் கொண்ட தொகுப்பாக, கின்னஸ் முதல் சாதனைப் புத்தகம் 1954-ம் ஆண்டில் வெளியானது. அது கின்னஸ் மது ஆலையைப் பிரபலப்படுத்தும் இலவச வெளியீடாக வழங்கப்பட்டது.

அது மிகப் பெரிய வரவேற்பைப் பெற, 25-09-1955-ம் ஆண்டு முதல் அது தனிப் புத்தகமாக வெளியிடப்பட ஆரம்பித்தது. விரைவிலேயே அதற்காகத் தனி நிறுவனமும் உருவாக்கப்பட்டது. 1998-க்குப் பிறகு புத்தகத்தின் தலைப்பில் 'உலகச் சாதனை' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, 'கின்னஸ் சாதனைப் புத்தகம்' என்ற பெயரில் வெளியாகி வருகிறது.
தற்போது 37 மொழிகளில் அச்சிடப்படும் கின்னஸ் புத்தகம்10 கோடி பிரதிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

உலகில் விற்கப்படும் (காப்புரிமை பெற்ற) புத்தகங்களில், எல்லாக் காலத்திலும் அதிகம் விற்கும் புத்தகமாக இருந்துவருகிறது.

இந்தச் சாதனை, கின்னஸ் புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நூலகங்களில் அதிகம் திருடப்படும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒரு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

2016-ம் ஆண்டுக்கான பதிப்பின் மூலம், கின்னஸ் புத்தகம் 62-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் இது வெளியாகிறது.

உலகின் அனைத்துப் பகுதிகளில் இருப்பவர்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெறுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

புதுக்கோட்டை "அம்மன் (சல்லி)காசு"

வள்ளலார் பிறந்த தினம்.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் நார்த்தாமலை, புதுக்கோட்டை மாவட்டம்