குறிஞ்சி மலர்கள்
குறிஞ்சி மலர்கள்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகின்றன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, மஞ்சூர், எப்பநாடு, கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காணப்படுகின்றன.
குறிஞ்சி பூவின் சிறப்பை விளக்கும் வகையில் தபால்தலையும் வெளியிடப்பட்டு உள்ளது. குறிஞ்சி மலர்களில் சுமார் 140–க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆண்டு தோறும் பூக்கும் குறிஞ்சி மலர்களும் அடங்கும். ஒருசில குறிஞ்சி மலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அரிய வகை குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகள் மற்றும் 16 முதல் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பூக்கின்றன. இந்த வகை குறிஞ்சி மலர்கள் தற்போது மிக குறைந்த எண்ணிக்கையில் தான் காணப்படுகிறது.
தொட்டபெட்டா
மிக அரிய வகையான 16 முதல் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தொட்டபெட்டா மலைப்பகுதியில் பூத்து உள்ளன. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வியந்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 140–க்கும் மேற்பட்ட குறிஞ்சி மலர் வகைகள் காணப்படுகின்றன. இதில் நீலகிரி மாவட்டத்தில் தான் குறிஞ்சி செடிகள் அதிகளவு வளர்கின்றன.
பாதுகாக்க நடவடிக்கை
தற்போது ‘ஸ்ட்ரோபிலாந்தஸ் ஜிங்கிரைனஸ்‘ வகை குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளன. இது 16 முதல் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்க கூடிய அரிய வகை குறிஞ்சி மலராகும். இதுபோன்ற குறிஞ்சி மலர்கள் ஆரம்ப காலத்தில் நீலகிரியில் அதிகளவு காணப்பட்டன. ஆனால் பார்த்தீனியம், லாண்டனா போன்ற வெளிநாட்டு களைச்செடிகளால் இதுபோன்ற அரிய வகை செடிகள் குறைந்து வருகின்றன.
குறிஞ்சி மலரில் இருந்து எடுக்கப்படும் தேன் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இதனை நீலகிரியில் உள்ள ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment