புதுக்கோட்டை "அம்மன் (சல்லி)காசு"
புதுக்கோட்டை சமஸ்தான தொண்டைமான் மன்னர்கள்சொந்தமாக ஒரு நாணயத்தை வெளியிட்டுக்கொண்டார்கள்.அதன் பெயர் அம்மன் காசு.அதன் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும். ஆகையால்தான் 'புதுக்கோட்டை அம்மன் காசு' என்ற பெயர். 'புதுக்கோட்டை அம்மன் சல்லி' என்றும் அழைப்பார்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம்.இந்தக் காசை அவர்கள் பெற்ற உரிமையின் அடையாளமாக வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த நாட்டின் அதிபதி பிரகதாம்பாள். அவளுடைய பிரதிநிதியாகத்தான் தொண்டைமான்கள் ஆண்டுவந்தனர்.பிரகதாம்பாள்தாச என்றுதான் அவர்களுடைய விருதுகள் தொடங்கும்.
Comments
Post a Comment