அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் நார்த்தாமலை, புதுக்கோட்டை மாவட்டம் சுவாமி : முத்துமாரியம்மன். மூர்த்தி : முருகன். தீர்த்தம் : ஆகாச ஊரணி, தலவர் சிங்கம், தளும்பு சுனை, பாழுதுபடா சுனை, (சுனை என்பது மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் உற்று நிலை). தலவிருட்சம் : வேம்பு. தல வரலாறு : நார்த்தாமலையில் அமைந்துள்ள ஆலயத்தில் அமர்ந்தபடி அத்தனை வளங்களையும் தந்தருள்கிறாள் முத்துமாரியம்மன். ஊரின் பெயர் நார்த்தாமலை என்பதால் இத்தலத்து அம்மன் நார்த்தாமலை முத்துமாரியம்மன் எனப் பெயர் பெற்றாள். தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால் நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் நார்த்தாமலை என மருவியதாக பெருங்களூர் ஸ்தல புராணம் விவரிக்கிறது. ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால், (between 7th AD and 9th AD), பல்லவ இராஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது ('பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தில் வந்தியத்தேவனின் “குதிரையை” பழுவ...