அக்.: 5 "வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலாரின் பிறந்த தினம். இராமலிங்க வள்ளலார்: கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் ராமையா - சின்னம்மை தம்பதியருக்கு 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் ஐந்தாவது மகனாக பிறந்தவர் தான் இராமலிங்கர். சபாபதி என்பவரிடம் ஐந்து வயதில் கல்வி கற்று, ஒன்பது வயதில் பாடும் திறமையையும், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் திறமையையும் பெற்று இருந்தார். சைவராக பிறந்து திருமாலை போற்றியவர். இவர் குழந்தையாக இருந்த போது கண்களில் அசைவுகள் இல்லாமல் இறைவனை பார்த்து சிரிப்பதை கண்ட ஆலய அந்தணர் "இறையருள் பெற்ற திருக்குழந்தை" என்று பாராட்டப்பட்டவர். சாதி மற்றும் மதங்களால் வேறுபட்டு இருந்த மக்களை அவற்றில் இருந்து விடுபட்டு வர வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். சத்திய தரும சாலை: சத்திய தரும சாலை எனும் பெயரில் பசியால் வாடும் அனைவருக்கும் சாதி மதம் ஆண் பெண் என வேறுபாடு பார்க்காமல் பார்க்காமல் உணவு வழங்கி வந்தார். இதற்காக அன்று அவர் மூட்டீய தீ இன்று வரை அணையாமல் பசித்தோர்க்கு உணவு வழங்கி வருகிறது. பசிப்பிணியால் வ...